அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி வாழ்த்து
அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி வாழ்த்து
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ள திரு.ஒ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ள திரு. எடப்பாடி பழனிசாமி ஆகிய இரு பெரும் தலைவர்களுக்கும் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
1972 இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கிய புரட்சித் தலைவர் எம்ஜிஆர், 1977 இல் ஆட்சியைப்பிடித்து, தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் வென்று இமாலய சாதனையை படைத்தார்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, அதிமுகவை ஒரே தலைமையின்கீழ் ஒருங்கிணைத்த புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் 1991ல் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து, பதவிகாலம் முழுவதும் ஆட்சியிலிருந்த முதல் தமிழக பெண் முதல்வர் என பெயர் பெற்றார். 6 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த செல்வி ஜெ.ஜெயலலிதா, தொட்டில் குழந்தைகள் திட்டம், அம்மா உணவகம், இலவச கறவை மாடு - ஆடுகள் வழங்கும் திட்டம் போன்ற எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை தமிழகத்துக்கு வழங்கினார்.
செல்வி ஜெயலலிதா மறைவுக்குப்பின், அ.இ.அ.தி.மு.க வின் முதல்வர்களாக அடுத்தடுத்து பதவி வகித்த, திரு.ஒ பன்னீர் செல்வம், திரு. எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும், கடந்த 4 ஆண்டுகளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு, அக்கட்சியை வழிநடத்தி வருகிறார்கள்.
2021 பேரவைத் தேர்தலில், அக்கட்சி மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த போதும், கவுரவமான எதிர்க் கட்சியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழுவில், ‘பொதுச் செயலாளர் பதவிக்குப் பதிலாக இனி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருக்கும் என்றும், இப்பதவிகளுக்கும் அதிமுக தொண்டர்கள் நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் முடிவு எடுக்கப்பட்டு டிச.7-ம் தேதி தேர்தல் நடக்கும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி 7 ஆம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக திரு.ஒ பன்னீர் செல்வம் அவர்களும், இணை ஒருங்கிணைப்பாளராக திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களும் தேர்வுசெய்யப்ட்டுள்ளனர்.
மண்டல் நாயகன், மக்கள் தலைவர், மறைந்த, திரு. ராம்விலாஸ் பஸ்வான் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, தற்போது அவரது இளைய சகோதரர் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. பசுபதி குமார் பாரஸ் அவர்கள் தலைமையில் இயங்கி வரும் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில், அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு.ஒ பன்னீர் செல்வம் அவர்களுக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியும், மத்தியில் பிரதமர் மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சிகள் ஆகும்.
புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் வழியில், தற்போது இருபெரும் தலைவர்கள் தலைமையில் இயங்கும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், மகத்தான வெற்றிகள் படைக்க ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி சார்பில் மனதார வாழ்த்துகிறோம்..
மணிமாறன் G V
தேசியப் பொதுச்செயலாளர்
இராஷ்டிரிய லோக் ஜன்சக்தி கட்சி
08th December 2021
Comments
Post a Comment