ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி - 22 ஆம் ஆண்டு துவக்க விழா
ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி - 22 ஆம் ஆண்டு துவக்க விழா
மண்டல் நாயகன், மறைந்த மக்கள் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் 22 ஆம் ஆண்டு துவக்க விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி தற்போது, மறைந்த தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்களின், இளைய சகோதரர், மாண்புமிகு மத்திய அமைச்சர் பசுபதி குமார் பாரஸ் அவர்களின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. கட்சியின் பீகார் மாநிலத் தலைவரும், நாடளுமன்ற உறுப்பினருமான பிரின்ஸ் ராஜ் கட்சிக்கு செயல்துடிப்புமிக்க வழிகாட்டுதல் அளித்து வருகிறார்.
ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் 22 ஆம் ஆண்டு துவக்க விழா தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கோலாகலாமாக கொண்டாடப்பட்டது. சென்னையில், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் G.V. மணிமாறன் முன்னிலையில் மறைந்த தலைவர் திரு.ராம் விலாஸ் பாஸ்வான் சிலைக்கு பூஜை செய்து, கட்சி கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் 22 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, தாம்பரத்தில் அவ்வை நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட்டன.
மண்ணிவாக்கத்தில் அமைந்துள்ள சரணாலயம் ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு அரிசி பருப்பு ஆகிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
கட்சியின் மாநிலத் தலைவர் சத்தியசீலன், மாநில பொதுச்செயலாளர் .சபரி சௌந்தர்ராஜன், மாநில இளைஞரணி தலைவர் ஜீவா மாநில வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் கமலக்கண்ணன், மாநிலத் துணைத் தலைவர் விஜய், மாநிலச் செயலாளர் பிரபு சுப்பையா, மாநிலத் துணைத் தலைவர் சிவா பரணி, மாநில மகளிர் அணி தலைவி வெள்ளத்தாய், பிரேம் ஜெபர்சன், சந்தோஷ், பார்த்திபன், மோகன், ஜெயப்பிரகாஷ், மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் 22 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருப்பூர் மாவட்ட RLJP சார்பில், சமூகநீதிக் காவலர் ராம்விலாஸ் பாஸ்வான் அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானமும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் மாநில துணை தலைவர். எஸ் பாலாஜி மாவட்ட தலைவர் T.ஈஸ்வர சாமி, மடத்துகுளம் ஒன்றிய தலைவர் சிவகுமார், உடுமலை ஒன்றிய தலைவர் சௌந்தர்ராஜன், குடிமங்கலம் ஒன்றிய தலைவர் முத்துப்பாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
செங்கல்பட்டு மாவட்ட RLJP சார்பில் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் இருபத்தி இரண்டாம் ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ், பார்த்திபன் செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்ட RLJP சார்பில் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் இருபத்தி இரண்டாம் ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் மாநில பொதுச்செயலாளர் பாண்டி செல்வம் , புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் சதீஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
சிவங்கை மாவட்ட RLJP சார்பில் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் இருபத்தி இரண்டாம் ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் மாநிலச் செயலாளர் ராஜ்குமார் மற்றும் மாவட்ட தலைவர் ரவி செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
தஞ்சாவூர் மாவட்ட RLJP சார்பில் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் இருபத்தி இரண்டாம் ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் மாநில பொதுச்செயலாளர் பாண்டி செல்வம் , மாவட்ட தலைவர் கருணாகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
Comments
Post a Comment