உணவு பதப்படுத்தும் துறையில் தமிழகத்தில் உன்னதமான வாய்ப்புகள்!
உணவு பதப்படுத்தும் துறையில் தமிழகத்தில் உன்னதமான வாய்ப்புகள்! G V மணிமாறன் முன்னாள் வங்கியாளர் சென்னை 06 டிசம்பர் 2021 விவசாயம், கால்நடை, மீன் வளர்ப்பு போன்ற துறைகளின் விளை பொருட்களை உண்ணுகின்ற பதத்திற்கு மாற்றி பக்குவப்படுத்துவதே உணவு பதப்படுத்தும் தொழிலாகும். தானியங்களை வீட்டு உபயோகத்திற்கு மாவாக அரைத்து தருவது முதல் உயரிய தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தி, சேர்க்கை மற்றும் பக்குவப் பாதுகாப்பு பொருட்களை சேர்த்து, உணவுப் பொருட்களை உண்ணும் பதத்திற்கு, பல நாள் கெடாமல் பாதுகாத்து வைக்கும் வண்ணம் ஆக்குவதும் உணவு பதப்படுத்தும் தொழிலின் உயரிய அம்சங்களாகும். இத்தகைய பதப்படுத்தும் தொழில் நுட்பங்கள், உணவு வீணாவதை தடுப்பதுடன், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றில் அளப்பரிய பங்காற்றுகின்றன. முன்னுரை : தமிழ்நாட்டின் விவசாயத் துறை பொருளாதாரத்தில் 12% பங்கினை அளித்து, 40% மக்களுக்கு வேலைவாய்ப்பு நல்குகிறது. மாம்பழம், வாழைப்பழம், மஞ்சள், பப்பாளி, அரிசி, சோளம், கரும்பு, தேங்காய், கடலை, மு...